பாவிச்சின் ஜிகினா துகள்கள்

மிலராத் பாவிச்சின் புனைவுலகில் பச்சை குத்தப்பட்ட மனிதன் ஒருவன் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். பைசான்டைன் பேரரசன் அறியும் பொருட்டு அவன் உடம்பெங்கும் கசார்களின் வரலாறு பச்சை குத்தப்பட்டு கான்ஸ்டண்டினோப்பிளுக்கு அனுப்பப்படுகிறான். இரண்டாம் கசார்களின் ஆண்டு குறித்த பதிவினை வாங்க நினைக்கும் ஒருவனால் அவனது இடக்கையை இழக்கிறான். பல முறை கசார் தலைநகரத்திற்கு வரலாற்றைத் திருத்தும் பொருட்டு அனுப்பவும் படுகிறான். பல மணி நேரங்கள் தொடர்ந்து நின்று, தன் முதுகிலிருந்தும், தொடையிலிருந்தும் பிரதி எடுக்கும் கிரேக்க எழுத்தர்களிடம் கூலி […]

Read More பாவிச்சின் ஜிகினா துகள்கள்

சிவப்பு கனவுகள் கண்டவன் – ஜூலியஸ் பூசிக்

https://www.jeyamohan.in/125463#.XY8Ao0YzZnI ஏப்ரல் 24, 1942. ஒரு நொண்டிக் கிழவர் கட்சி அலுவல் நிமித்தமாகத் தட்டுத் தடுமாறி ஜிலினெக் தம்பதியின் வீட்டை வந்தடைகிறார். தேநீர் பரிமாறப்படும் வேளையில் கெஸ்டப்போ காவலாளிகள் அவர்களைக் கண நேரத்தில் சூழ்ந்து கொள்கிறார்கள். அந்நிமிடம் அப்படையினருக்கு எத்தகைய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறதென்பது தெரியாது… பிரஃபஸர் ஹோராக்கின் வசம் துப்பாக்கியுள்ளது. பிரயோகித்தால் அறையில் உள்ள தன் குழுவினர் மேல் கெஸ்டப்போவினர்  தாக்குதல் நடத்தக்கூடும் என்று எண்ணித் தயங்கி நிற்கிறார். காவலாளிகள் பலவந்தப்படுத்தி அவரை கொண்டு செல்லும்போதும்,  கிழவர் […]

Read More சிவப்பு கனவுகள் கண்டவன் – ஜூலியஸ் பூசிக்

ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

பொழுது மிகவும் பிந்திவிட்டிருந்தது. அனைவரும் அந்த விடுதியை விட்டு வெளியேறியிருந்தனர் ஒரு வயோதிகரைத் தவிர. மின் விளக்கினால் விழுந்த இலைகளின் நிழல் தன் மேல் படும்படி அவர் அமர்ந்திருந்தார். பகல் முழுக்கத் தூசி படிந்திருக்கும் அத்தெருவில் தூசடங்கி பனிப்படர்ந்திருந்தது. அந்த அந்தி வேளையில் அங்கே அமர்ந்திருப்பது அந்த காது கேளாதவருக்குப் பிடித்திருந்தது. இரவில் நிலவும் நிசப்தத்திலிருந்த வித்தியாசத்தை அப்போழுது அவரால் உணர முடிந்தது. விடுதியிலுள்ள இரண்டு பணியாட்களுக்கும் தெரியும் அந்த முதியவர் குடித்திருக்கிறாரென்று. என்ன தான் நல்ல […]

Read More ஒரு சுத்தமான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

முகலாயன் – சிறுகதை

எண்ணங்களாலான ரயில் மிதவேகத்திலிருந்து அபாய நிலைக்குச் சென்று சுமார் எழுபது நிமிடங்களாகிவிட்டிருந்தன. பூண்டைத் துண்டாக்கி  வகிடெடுக்கும் இடத்தில் தேய்த்தால் முடி நன்கு வளரும் என்று காவி உடுத்திய வைத்தியர் நம்பிக்கையளிக்கிறார். நீண்ட பற்களுடன் எங்கிருந்தோ நுழைந்த  ட்ராக்குலா பூண்டைக் கண்டு மிரண்டு அங்கிருந்து நகர்கிறான். நான் ரத்த தானமளித்துக் கொண்டிருக்கும் இடம் நோக்கி நேரே ஓடி வரும் அவனை இடைமறித்து, என் கணக்கு வாத்தியார் O என அவன் முதுகில் ஒரு முத்திரை போடுகிறார்.  “O பாஸிட்டிவ் […]

Read More முகலாயன் – சிறுகதை

ஏன் கின்ட்சுகி?

Twitter Id : swethamayuri_s என் பள்ளி நாட்களில் நடந்த ஓரு சம்பவம். தோழிகளுடன் எனக்கு பிடித்தமான புத்தகக் கடைக்குச் சென்றிருந்தேன். வேடிக்கை பார்க்கத்தான். அந்த கடையில் ஒரு பாதி புத்தகங்கள், மீதி பாதி அலங்காரப் பொருட்கள், பொம்மைகள், எல். ஆர். ஈஸ்வரி ஒலித்தட்டுகள் என வகையும் வண்ணமுமாய் நிரம்பியிருக்கும். சிறிது நேரத்தில் என் விரல்கள் நூல் அறுபட்ட ஹீலியம் பலூன் போல் மூளையுடனானத் தொடர்பைத் துண்டித்து ஒரு விந்தையை நிகழ்த்தியது. தரையில் இரு மூலையிலிருந்தது ஒர் […]

Read More ஏன் கின்ட்சுகி?