நானை நானென்று நினையாது…

அமெரிக்க பாடகர் பாப் டிலன் 1965 இல் எழுதிய பாடல் “Like a Rolling stone”. உருண்டோடும் கல்லை போல் எதன் மேலும் பற்றில்லாத வீடில்லாத ஒருவனிடம் ‘எப்படி உணர்கிறீர்கள்?’என்று வினவுகின்ற பாடல் அது.  எப்படி உணர்கிறீர்கள்?.. எப்படி உணர்கிறீர்கள்?தனிமையில் இருப்பதை வீடு திரும்ப வழியில்லாமல்அடையாளம் என ஒன்றும் இல்லாமல்உருண்டோடும் ஒரு கல்லை போல்? அடையாளம் இல்லாததை ஒருவித போதாமையாக முன்வைக்கும் வரிகள் டிலனுடையது. இவ்வரிகள் உரிமையுடன் கேள்வி கேட்கின்றன, செல்வமும் செல்வாக்கும் இழந்து மேலிருந்து கீழே […]

Read More நானை நானென்று நினையாது…

செஞ்சூழ் நிலம்

நாங்கள் நாற்பது பேரிருப்போம். வெவ்வேறு ஊர்களையும் வெவ்வேறு பின்னணிகளையும் கொண்டவர்கள். எங்கள் ஆசிரியர் ஜெயக்குமார் சுற்றி தொப்பியும், குடையுமாக வேர்க்க விறுவிறுக்கக் குழுமியிருந்தோம். பாத பந்த அதிஷ்டானமா அல்ல வேத பந்த அதிஷ்டானமா என்கிற வினாவிற்குப் பதில் கூறிவிட்டு கோவில் விமானம் குறித்துப் பேசத்தொடங்கியிருந்தார் ஜேகே. தொப்பியும், தோள் பையும், கையில் சிறு குறிப்பேடுமாகச் செம்மண் சூழ்ந்த வெளியில் வேர்வை வழிய நிற்கையில், செப்பியா (Sepia) இழைந்த புகைப்படத்தில் தொண்ணூறுகளில் உறைந்துவிட்ட ஒரு வரலாற்று ஆய்வாளர் போலிருந்தேன் […]

Read More செஞ்சூழ் நிலம்

நீரில் மூழ்குபவர்கள் : ஆலிஸ் மன்றோவின் படைப்புலகம்

பிரிட்டிஷ் எழுத்தாளர் எமிலி ப்ரோண்டே இறந்த போது அவருக்கு வயது முப்பது. எமிலி புகழ்பெற்ற ப்ரோண்டே சகோதரிகளில் ஒருவர். அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தான் (1847) “எல்லிஸ் பெல்” என்னும் ஆண் பெயரில், அவருடைய முதலும் கடைசியுமான நாவல் “உதரிங் ஹைட்ஸ்” (Wuthering Heights) வெளியானது. சிக்கலான கதையமைப்பு, கோதிக் (Gothic) கூறுகள் மற்றும் அதன் ஆசிரியரின் அகால மரணம் போன்ற காரணங்களால் இந்நாவல் ஆங்கில செவ்வியல்கள் படிக்கத் தொடங்குபவர்களின் பட்டியலில் தவறாது இடம் […]

Read More நீரில் மூழ்குபவர்கள் : ஆலிஸ் மன்றோவின் படைப்புலகம்

தத்துவத்தை மொழியியல் ஆக்கிரமித்தது எப்படி? : க்ரிஸ்பின் சாட்வெல்

தமிழில் : ஸ்வேதா மயூரி இக்கட்டுரை தத்துவத் துறையின் மைய பேசுபொருளாக மொழியியல் உருவான கதையை சொல்கிறது. 20ஆம் நூற்றாண்டின் அதிவேக அறிவியல் வளர்ச்சி தத்துவத்திலும் கிளர்ச்சியை உண்டாக்கியது. அக்கால அறிஞர்கள் சிலர் 19ஆம்  நூற்றாண்டின் மீபொருண்மை சிந்தனைகள் மீது நம்பிக்கை இழந்திருந்தனர். அவர்களுக்குத் தேவை புறவயமாக அனைவரும் சோதித்துப்பார்க்கக்கூடிய ஒரு தத்துவ தளம். மொழி அவர்களுக்கு அப்படியான ஒரு தளத்தை வழங்கியது. தத்துவ கேள்விகளை அவை கேட்கப்படும் மொழியில் வைத்து அவர்கள் ஆராயத்தொடங்கினார்கள். மொழியின் தன்மை மற்றும் அதன் […]

Read More தத்துவத்தை மொழியியல் ஆக்கிரமித்தது எப்படி? : க்ரிஸ்பின் சாட்வெல்