நானை நானென்று நினையாது…

அமெரிக்க பாடகர் பாப் டிலன் 1965 இல் எழுதிய பாடல் “Like a Rolling stone”. உருண்டோடும் கல்லை போல் எதன் மேலும் பற்றில்லாத வீடில்லாத ஒருவனிடம் ‘எப்படி உணர்கிறீர்கள்?’என்று வினவுகின்ற பாடல் அது.  எப்படி உணர்கிறீர்கள்?.. எப்படி உணர்கிறீர்கள்?தனிமையில் இருப்பதை வீடு திரும்ப வழியில்லாமல்அடையாளம் என ஒன்றும் இல்லாமல்உருண்டோடும் ஒரு கல்லை போல்? அடையாளம் இல்லாததை ஒருவித போதாமையாக முன்வைக்கும் வரிகள் டிலனுடையது. இவ்வரிகள் உரிமையுடன் கேள்வி கேட்கின்றன, செல்வமும் செல்வாக்கும் இழந்து மேலிருந்து கீழே […]

Read More நானை நானென்று நினையாது…

செஞ்சூழ் நிலம்

நாங்கள் நாற்பது பேரிருப்போம். வெவ்வேறு ஊர்களையும் வெவ்வேறு பின்னணிகளையும் கொண்டவர்கள். எங்கள் ஆசிரியர் ஜெயக்குமார் சுற்றி தொப்பியும், குடையுமாக வேர்க்க விறுவிறுக்கக் குழுமியிருந்தோம். பாத பந்த அதிஷ்டானமா அல்ல வேத பந்த அதிஷ்டானமா என்கிற வினாவிற்குப் பதில் கூறிவிட்டு கோவில் விமானம் குறித்துப் பேசத்தொடங்கியிருந்தார் ஜேகே. தொப்பியும், தோள் பையும், கையில் சிறு குறிப்பேடுமாகச் செம்மண் சூழ்ந்த வெளியில் வேர்வை வழிய நிற்கையில், செப்பியா (Sepia) இழைந்த புகைப்படத்தில் தொண்ணூறுகளில் உறைந்துவிட்ட ஒரு வரலாற்று ஆய்வாளர் போலிருந்தேன் […]

Read More செஞ்சூழ் நிலம்

நீரில் மூழ்குபவர்கள் : ஆலிஸ் மன்றோவின் படைப்புலகம்

பிரிட்டிஷ் எழுத்தாளர் எமிலி ப்ரோண்டே இறந்த போது அவருக்கு வயது முப்பது. எமிலி புகழ்பெற்ற ப்ரோண்டே சகோதரிகளில் ஒருவர். அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தான் (1847) “எல்லிஸ் பெல்” என்னும் ஆண் பெயரில், அவருடைய முதலும் கடைசியுமான நாவல் “உதரிங் ஹைட்ஸ்” (Wuthering Heights) வெளியானது. சிக்கலான கதையமைப்பு, கோதிக் (Gothic) கூறுகள் மற்றும் அதன் ஆசிரியரின் அகால மரணம் போன்ற காரணங்களால் இந்நாவல் ஆங்கில செவ்வியல்கள் படிக்கத் தொடங்குபவர்களின் பட்டியலில் தவறாது இடம் […]

Read More நீரில் மூழ்குபவர்கள் : ஆலிஸ் மன்றோவின் படைப்புலகம்

தத்துவத்தை மொழியியல் ஆக்கிரமித்தது எப்படி? : க்ரிஸ்பின் சாட்வெல்

தமிழில் : ஸ்வேதா மயூரி இக்கட்டுரை தத்துவத் துறையின் மைய பேசுபொருளாக மொழியியல் உருவான கதையை சொல்கிறது. 20ஆம் நூற்றாண்டின் அதிவேக அறிவியல் வளர்ச்சி தத்துவத்திலும் கிளர்ச்சியை உண்டாக்கியது. அக்கால அறிஞர்கள் சிலர் 19ஆம்  நூற்றாண்டின் மீபொருண்மை சிந்தனைகள் மீது நம்பிக்கை இழந்திருந்தனர். அவர்களுக்குத் தேவை புறவயமாக அனைவரும் சோதித்துப்பார்க்கக்கூடிய ஒரு தத்துவ தளம். மொழி அவர்களுக்கு அப்படியான ஒரு தளத்தை வழங்கியது. தத்துவ கேள்விகளை அவை கேட்கப்படும் மொழியில் வைத்து அவர்கள் ஆராயத்தொடங்கினார்கள். மொழியின் தன்மை மற்றும் அதன் […]

Read More தத்துவத்தை மொழியியல் ஆக்கிரமித்தது எப்படி? : க்ரிஸ்பின் சாட்வெல்

மிட்டி இத்தர் – நாடகம்

(இருட்டினில் குரல்கள் கேட்கின்றன) இப்னு  : மிஹிர் உன்-நிசா! இங்கு அந்த முட்டாள் இல்லை. அவன் போய்விட்டான்! நூர் : ப்ச்ச்! அவர் மட்டுமே என்னை அப்படி அழைக்கலாம்! உங்களுக்கும் இவர்களுக்கும் நான் எப்போதும் நூர் ஜஹான்! (கதவு திறக்கும் ஒலி கேட்கிறது. ஓர் ஒல்லி இளைஞன் அறையின் விளக்குகளைச் சொடுக்கிவிட்டு வந்த வழியே ஓடி மறைகிறான். அழுக்கு மஞ்சள் நிறத்தில் முழுச் சுவரை மறைக்கும் ஒரு சுவரொட்டி வெளிச்சத்தில் மெல்ல தெரிகிறது. சாம்பல் நிற சிமெண்ட் […]

Read More மிட்டி இத்தர் – நாடகம்

புனைவு மொழியாக்கம் – ஒரு விவாதம்

  எழுத்தாளர் அ. முத்துலிங்கம் உடனான இணைய உரையாடல் ஒரு சிறப்பான அனுபவம். பைலட் உடன் காக்பிட்டில் சவாரி செய்வது, பிடித்த எழுத்தாளரை விடாது விரட்டி சந்திப்பது என ஆர்வத்தின் பேரில் அமைந்த அவரது சாகசங்களின் பட்டியல் வியப்புக்குரியவை . அவரை ஒரு முன்னோடி எழுத்தாளர், உலகத்தை ஆரத் தழுவி இலக்கியம் படைத்தவர் என்ற முறையில் பெரிதும் மதித்திருந்தேன். ஆனால் அவருடைய இந்த இயல்பு எனக்கு “அடுத்து என்ன” என்ற வாசகத்தை மஞ்சள் பெயிண்டில் வரைந்து எலுமிச்சையும் […]

Read More புனைவு மொழியாக்கம் – ஒரு விவாதம்

மலேசியா.. சில குறிப்புகள்

December 18 – December 25, 2019 முதல் சர்வதேச பயணம், மலேசியாவிற்கு. எழுத்தாளர் ம. நவீன் ஒருங்கிணைக்கும் வல்லினம் விருது விழா மற்றும் சுவாமி பிரம்மானந்தா வித்யாரண்யத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்ற எழுத்தாளர் ஜெயமோகன் அழைக்கப்பட்டிருந்தார். ஜெவுடன் அருணாமாவும் சைதன்யாவும் பிரயாணத்திற்கு ஆயத்தமாக, GSSV நவீனும் நானும் உடன் தொற்றி கொண்டோம்.  கூலிம் தியான ஆசிரமத்தில் எழுத்தாளர் சை. பீர். முகம்மதிற்கு வல்லினம் விருது அளிக்கப்படவிருந்தது. விழாவில் ம. நவீனின் நாவல் ‘பேய்ச்சி’யை வெளியிட்டு […]

Read More மலேசியா.. சில குறிப்புகள்

அபி தீட்டும் அச்சங்கள்

மனிதர்களில் ஒரு சிலர் மரபணு மாற்றத்தால் பிறர் கண்ணுக்குத் தெரியாத நிறங்கள் காணக்கூடிய திறன் பெற்றிருக்கிறார்கள். சாதாரண மனிதர்களை விட தொண்ணூறு லட்சம் வரையில் அதிக நிறங்கள் பார்க்க முடிந்த அவர்களை ‘Tetrachromats’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.  தான் அவ்வாறு ஒரு Tetrachromat என்று அறியாத ஓவிய ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களை ஏரியோரம் அழைத்துச் செல்கிறார். மாணவர்களைப் பார்த்து “அந்த பாறையின் ஓரத்தில் உள்ள ஊதா கோடு தெரிகிறதா? அந்த இலையின் நுனியில் துவங்கும் அந்த சிவந்த […]

Read More அபி தீட்டும் அச்சங்கள்

“அழகிய மரம்”

1776ஆம் ஆண்டு. ரோமிலிருந்து பாலினோ தா பர்தால்மோ  (Paolino da San Bartolomeo)  என்னும் போதகர் மலபார்  வந்திறங்கினார்.  1789 வரையில் இந்தியாவில் தங்கிய அவர், இந்திய மொழிகள் குறிப்பாக சமஸ்கிருதம் மீது அலாதி ஆர்வம் கொண்டவராக இருந்தார். அலெக்சாண்டர் காலகட்டத்திலேயே மேன்மை எட்டியிருந்த இந்திய கைவினைத்தொழிலாளர்களின் நகல் தயாரிக்கும் புகழைக் கேள்வியுற்று, போர்ச்சுகலில் தயாரான வேலைப்பாடு மிகுந்த விளக்கினை இந்தியக் கைவினைக் கலைஞர் ஒருவரிடம் ஒப்படைத்தார். சில நாட்களில் எது அசல், எது நகல் எனக் […]

Read More “அழகிய மரம்”

இந்த பெருசுகளே இப்படித்தான்!

“இது என்ன?” “தொப்பி”  ஒவ்வொரு முறையும் இதே பதில். ஆறு வயது கதைசொல்லியிற்குப் பெரியவர்கள் அளிக்கும் இந்த விடை திருப்திகரமாக இல்லை.  அவன் நினைத்தபடி அவன் வரைந்த ஓவியம் அவர்களைப் பயமுறுத்தவும் இல்லை. கதை சொல்லி பெரியவனானான். அவனுடைய விமானம் ஆள் அருவமற்ற பாலைவனம் ஒன்றில் பழுதடைந்து விழுகிறது. எவரும் இல்லை என்று திகைத்து நிற்கும் விமானியின் முன் நம் நாயகன் குட்டி இளவரசன் எதிர்ப்படுகிறான்.  ஒரு செம்மறி ஆட்டை விமானி வரைந்து கொடுப்பானானால் அதை தன் […]

Read More இந்த பெருசுகளே இப்படித்தான்!